Wednesday, May 7, 2008

கொக்குவில்

சில ஆண்டுகளிற்கு முன்னர் என் பதின்வயது நினைவுகளை கவிதை நடையில் பதிவாக்க முயன்றேன். அந்த கொப்பி ஒற்றைகள் கிழிந்த பின்னரும் அதன் எஞ்சிய தாள்களில் எனக்கு கிடைத்தவை எடிசன் அக்கடமியில் நான் படித்த காலம் பற்றியும் ஒரு பெண்ணை வர்ணித்தும் நன் எழுதிய சில வரிகள்

கொக்குவில்

கொக்குவில் கோவில் பூமி
நான் கொள்கைகள் வகுத்த பூமி.
கோடிகள் அள்ளி கொடுப்பினும்
கோடான கோடி தலங்கள் முடிப்பினும்
பிறர்
எட்டிடா நண்பர் பெற்று
நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.

அங்கு
கல்வியை கற்க வந்தேன்
கல்வியும் கற்று கொண்டேன்
கணப்பொழுதேனும் இதயம்
பிரிந்திடா நண்பர் என்று
இருவரைப் பெற்று எந்தன்
இதயத்தை வகுத்த பூமி.

அங்கு
வாழ்ந்தவை வசந்த நாட்கள்
வசந்தமே தேடும் நாட்கள்
குட்டி கடையிலே கூடி நின்று
கூட்டமாய் பீடா தின்று
பெட்டி கடையிலே பாணும் வாங்கி
பிச்சையில் பட்டர் வாங்கி
உண்டு நாம் இருந்த நாட்கள்
இனி என்றுமே எட்டா நாட்கள்.

அவை
காவியம் நடந்த நாட்கள்
நான் வாழ்வினை உணர்ந்த நாட்கள்

2 comments:

கிடுகுவேலி said...

நீ மீட்டும் போதுதான் மனது வருடப்படுகின்ற சுகம் கிடைக்கின்றது. எப்படித்தான் உன்னால் மட்டும் முடிகிறதோ? வாழ்க்கை நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும் எங்களுக்கெல்லாம் இப்படியான நினைவுகள் தான் களிம்பு தடவுகின்றன. காயங்கள் நிறைந்ததுதான் எல்லோர் வாழ்வும். இப்படிப்பட்ட களிம்புகளும் இல்லையேல் வாழ்வின் வசந்தம் அற்றுப்போய் விடும். எப்பொழுதும் காயமும் வேண்டும். அவ்வப்பொழுது களிம்பும் வேண்டும். எழுது. அதற்கு நாம் அடிமை. வாழ்த்துக்கள்.

அருண்மொழிவர்மன் said...

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற பாலகுமாரனின் நாவலில் (பார்த்திபன் - சீதா திருமணத்தை அடிப்படையாக வைத்து கிட்டதட்ட பார்த்திபனைன் சொந்தக்கதையாகவே சொல்லப்பட்ட நாவல் இது) பாலகுமாரன் சொல்லுவார் "எதிர்பார்த்த பொருள் எதிர்பார்த்த நேரங்களில் கிடக்காமல் இருப்பதில்தான் வாழ்வின் சுவாரஸ்யமே இருக்கின்றது" என்று. அதுதான் உண்மை. என்னைப்பொறுத்தவரை "வாழ்க்கை என்பது வலி தாங்குவது". எவர் எவர் எப்படி தாங்குகின்றனர் என்பட்க்ஹில் தங்கியுள்ளது அவரவர் வெற்றி.