Saturday, September 6, 2008

எனக்காக உயிர்தரும் நண்பனே……..

எனக்காக உயிர்தரும் நண்பனே……..

உனக்காக உயிரையும் தருவேன்
என்று அடிக்கடி சொல்லும் நண்பனே
உன்னை என்னால் மதிக்க முடியவில்லை

இது போலதான் இன்னும் சிலரும்
உன்னிடம்
சொல்லியிருப்பார்கள்.
கடவுளை கண்டதாய் சொல்லும்
சாமியார்கள் போன்ற
இந்த சம்பிரதாய் சொற்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

நான் வேண்டும் நட்பு
எனக்காக உயிர் தருவதல்ல
என்
அந்திம காலம் வரை எனக்கொரு
துணையாக வாழ்வது.
உனக்காக என் வாழ்வினை
எழுதி வைக்கவும் நான் தயார்
ஆனால்
உனக்காக உயிர்விட்டு
உன்னை விலக மாட்டேன்.
எனக்கு தெரியும்
என்னை தவிர உனக்காக வாழ
எவனுமே பிறக்கமாட்டான் என்று
அப்படி தான்
உனக்கும்
ஒரு நம்பிக்கை இருக்கும் என்றெண்ணுகிறேன்.
அதனால் தான் சொல்லுகிறேன்
உனக்காக உயிரையும் தருவேன்
என்று அடிக்கடி சொல்லும் நண்பனே
உன்னை என்னால் மதிக்க முடியவில்லை

3 comments:

கிடுகுவேலி said...

நண்பா, தொப்பி நிறைய பேருக்கு அளவாக இருக்கும் என் நினைக்கிறேன். அவரவர் போட்டுக்கொண்டு என்னடா இப்படி சொல்லிட்டானே எண்டு ஏங்கப்போகிறார்கள். யதார்த்தம்தான் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் சரி.

அருண்மொழிவர்மன் said...

உண்மைதான்...... ஓரிரு நாள் கண்டவுடனேயே அவனை friend என்று சரியான புரிதல்கள் இல்லாமலேயே அழைப்பது தான் இப்படியான் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்.
"தலைசாய மடியா இல்லை
தலை கோத விரலா இல்லை " என்ற வைரமுத்துவின் ஆதங்கம் ஒரு நல்ல் நட்பினால் இலகுவாக தீரக்கூடியது

செல்வேந்திரன் said...

Good thought !